சிவகார்த்திகேயன் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில், இந்த படத்தை வருகிற மார்ச் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், படத்தின் ‘சோ பேபி’ என்ற பாடலை இன்று (பிப்ரவரி 25-ஆம் தேதி) ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் இசையமைத்துள்ளாராம்.

Share.