மெகா ஹிட்டான சிவகார்த்திகேயனின் ‘டான்’… வெளியானது GUN PRANK காட்சியின் மேக்கிங் வீடியோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, ‘ப்ரின்ஸ்’, ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள ‘டான்’ படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.

இப்படம் இந்த ஆண்டு (2022) மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார், கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்திருந்தார், நாகூரான் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. தற்போது, இந்த படத்தில் இடம்பெற்ற GUN PRANK காட்சியின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Share.