சிவகார்த்திகேயன் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்துள்ள ‘டான்’… வெளியானது ‘பிரைவேட் பார்ட்டி’ பாடல் ப்ரோமோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, அனுதீப் கேவி படம், ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் இரண்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். இவ்விரண்டு பாடல்களும் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படம் வருகிற மே 13-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக்கான ‘பிரைவேட் பார்ட்டி’யை நாளை (ஏப்ரல் 30-ஆம் தேதி) மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.