சிவகார்த்திகேயன் – ‘மண்டேலா’ இயக்குநர் கூட்டணியில் உருவாகும் ‘மாவீரன்’… வெளியானது மாஸான டீசர்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், ப்ரின்ஸ்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘மாவீரன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கவிருக்கிறார். இதே டைட்டிலில் 1986-ஆம் ஆண்டு வெளியான படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் – மடோன் அஷ்வின் கூட்டணியில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தை ‘சாந்தி டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இதில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் வில்லன் ரோலில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படுமாம்.

Share.