அடேங்கப்பா… முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ, டாக்டர்’ என படங்கள் குவிந்தது.

2010-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன். இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ மற்றும் இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு ரூ.175 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.