2020-யில் ரிலீஸாகி ஹிட்டான படத்தின் இயக்குநருடன் கூட்டணி… கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங் பெரியசாமி தான் இயக்க உள்ளாராம். சிவகார்த்திகேயனுக்கு தேசிங் பெரியசாமி கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதாம். ஆகையால், உடனே கிரீன் சிகனல் கொடுத்து விட்டாராம் சிவா. தற்போது, தேசிங் பெரியசாமி தனது டீமுடன் இணைந்து திரைக்கதையை எழுதி வருகிறாராம்.

Share.