‘சூப்பர் ஸ்டார், தல, தளபதி’-ஐ நெருங்கும் சிவகார்த்திகேயன்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ, டாக்டர்’ என படங்கள் குவிந்தது. இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ மற்றும் இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நெல்சன் இயக்கத்தில் ரிலீஸான ‘டாக்டர்’ ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சிவாவின் கேரியரில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் இதுதானாம். சிவாவின் சம்பளமும் கூடிக் கொண்டே போகிறது. ஆகையால், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘தல’ அஜித், ‘தளபதி’ விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் அந்தஸ்த்தை சிவா நெருங்கி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Share.