‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இவர் நடிப்பில் ‘அன்பறிவு, சிவகுமாரின் சபதம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சிவகுமாரின் சபதம்’ நேற்று (செப்டம்பர் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ஆதியே இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடித்துள்ளார். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்துள்ள இதற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், தீபக்.எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளாராம். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.73 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.