‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி – மாதுரி ஜோடியாக நடித்துள்ள ‘சிவகுமாரின் சபதம்’… எப்போது ரிலீஸ்?

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இப்போது ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் ‘அன்பறிவு, சிவகுமாரின் சபதம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை ஆதியே இயக்கியுள்ளார்

இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடித்துள்ளார். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்துள்ள இதற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், தீபக்.எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறாராம்.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘சிவகுமார் பொண்டாட்டி’, ‘பாகுபலிக்கு ஒரு கட்டப்பா’, ‘நெருப்பா இருப்பான்’, ‘மிடில் கிளாஸ்’ ஆகிய 4 பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘சிவகுமார் பொண்டாட்டி’, ‘பாகுபலிக்கு ஒரு கட்டப்பா’, ‘நெருப்பா இருப்பான்’, ‘மிடில் கிளாஸ்’ ஆகிய 4 பாடல்கள் இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்நிலையில், இந்த படத்தை வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.