இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டியுள்ள எஸ்ஜே.சூர்யா!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக உருவெடுத்து இன்றுவரை தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் எஸ்ஜே.சூர்யா. தன்னுடைய வித்தியாசமான கதை தேர்விற்காக ரசிகர்களால் ரசிக்கப்படும் எஸ்ஜே.சூர்யா சமீபத்தில் “மான்ஸ்டர்” என்கிற காமெடி திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் “பொம்மை” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1964ம் வருடம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படத்தின் டைட்டில் தான் பொம்மை. அந்தப் படத்தின் டைட்டிலை தற்போது இந்த படத்திற்கு வைப்பதற்கு அனுமதி வாங்கியுள்ளார்கள்.

ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவில் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் எஸ்ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

தற்போது பொம்மை படத்தின் பின்னணி இசை நடந்து முடிந்துள்ள நிலையில், எஸ்ஜே.சூர்யா யுவன் சங்கர் ராஜாவை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் “பின்னணி இசையின் ராஜா என்றழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையில் ராதாமோகனின் காட்சிகளுக்கு பலம் சேர்க்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரொமான்டிக் திரில்லர் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுடன் உங்களை சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

Share.