முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் கதாநாயகன்

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வீரமே வாகை சூடும் . இந்த படத்தை து. பா.சரவணன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்து இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆன்டனி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக S.J.சூர்யா நடிக்க இருக்கிறார். மாநாடு படத்தில் வில்லனாக நடித்து பிறகு தொடர்ந்து வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்திலும் S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் மற்றும் S.J.சூர்யா ஆகிய இருவருமே இரட்டை வேடத்தில் நடித்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாக இருக்கிறது. இரண்டு கால கட்டத்தில் நடப்பது போல் இந்த கதை நடக்க இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Share.