எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘பொம்மை’… வெளியானது ட்ரெய்லர்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் ராதாமோகனின் ‘பொம்மை’, இயக்குநர் அஷ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’, இயக்குநர் தமிழ்வாணனின் ‘உயர்ந்த மனிதன்’, வெங்கட் ராகவனின் ‘கடமையை செய்’, விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ என ஐந்து படங்களும், இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸின் ‘வதந்தி’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பொம்மை’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸுக்காக எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இன்று (ஜூன் 1-ஆம் தேதி) இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. ரொமான்டிக் த்ரில்லர் ஜானர் படமான இதில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறாராம்.

Share.