எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘பொம்மை’… ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்?

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் ராதாமோகனின் ‘பொம்மை’, இயக்குநர் அஷ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’, இயக்குநர் தமிழ்வாணனின் ‘உயர்ந்த மனிதன்’, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’, இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் ‘டான்’, வெங்கட் ராகவனின் ‘கடமையை செய்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பொம்மை’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸுக்காக எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, இதன் ட்ரெய்லரை வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யாவே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். ரொமான்டிக் த்ரில்லர் ஜானர் படமான இதில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறாராம்.

Share.