எஸ்.ஜே.சூர்யா – யாஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘கடமையை செய்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, உயர்ந்த மனிதன், கடமையை செய், இறவாக்காலம், மார்க் ஆண்டனி’ என ஐந்து படங்களும், இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கும் ‘வதந்தி’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கடமையை செய்’ திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 12-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மொட்ட ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத், சேசு, ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Share.