அடேங்கப்பா… எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் த்ரில்லர் வெப் சீரிஸின் பட்ஜெட் இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் ராதாமோகனின் ‘பொம்மை’, இயக்குநர் அஷ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’, இயக்குநர் தமிழ்வாணனின் ‘உயர்ந்த மனிதன்’, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’, இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் ‘டான்’, வெங்கட் ராகவனின் ‘கடமையை செய்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், எஸ்.ஜே.சூர்யா ஒரு புதிய வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமானார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இவ்வெப் சீரிஸை ‘கொலைகாரன்’ படம் மூலம் ஃபேமஸான ஆண்ட்ரு லூயிஸ் இயக்கி வருகிறாராம். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

தற்போது, இவ்வெப் சீரிஸுக்கான பட்ஜெட் ரூ.30 கோடி என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரிஸ் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸாகுமாம். விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.