க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா… இயக்குநர் யார் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு நடிகராக திரையில் மாஸ் காட்டுவதற்கு முன்பே, எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குநராக சினிமாவில் தன் முத்திரையை பதித்தார். முதல் படமே ‘தல’ அஜித்தை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். அது தான் ‘வாலி’. ‘வாலி’-க்கு பிறகு ‘குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை’ என தொடர்ந்து படங்கள் இயக்கினார்.

இதில் ‘நியூ, இசை, அன்பே ஆருயிரே’வில் ஒரு ஹீரோவாகவும் வலம் வந்து கெத்து காட்டினார் எஸ்.ஜே.சூர்யா. இப்படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குநர்கள் இயக்கிய ‘கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, இறைவி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை’ என தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

Sj Suryah's Crime Thriller Web Series Update1

Sj Suryah’s Crime Thriller Web Series Update1

இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் ராதாமோகனின் ‘பொம்மை’, இயக்குநர் அஷ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’, இயக்குநர் தமிழ்வாணனின் ‘உயர்ந்த மனிதன்’, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’, இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் ‘டான்’, வெங்கட் ராகவனின் ‘கடமையை செய்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா ஒரு புதிய வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இவ்வெப் சீரிஸை ‘கொலைகாரன்’ படம் மூலம் ஃபேமஸான ஆண்ட்ரு லூயிஸ் இயக்க உள்ளாராம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்த சீரிஸ் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸாகுமாம்.

Share.