சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டாக்டர் . இந்த படத்தை தொடர்ந்து டான் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் . இயக்குனர் கவுதம் வாசுதேவ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது . டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் .
டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் வருகின்ற மே மாதம் 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன் . அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது .

Share.