கமல் ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ சினேகன் – நடிகை கன்னிகா ரவி திருமணம்!

சினிமாவில் பாப்புலர் பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் சினேகன். இவர் ‘பாண்டவர் பூமி, தமிழ், சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், பகவதி, சொக்கத்தங்கம், காதல் சுகமானது, சாமி, கோவில், பேரழகன், மன்மதன், ராம், பருத்திவீரன், கழுகு’ போன்ற பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்.

சினேகன் 2009-ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். சுப்ரமணிய சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக அமீர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘உயர்திரு 420’ என்ற படத்தில் ஹீரோவாகவே நடித்திருந்தார் சினேகன். இந்த படத்தை இயக்குநர் பிரேம்நாத் இயக்கியிருந்தார்.

பின், சினேகன் ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். தற்போது, பாடலாசிரியரும், நடிகருமான சினேகன், நடிகை கன்னிகா ரவியை இன்று (ஜூலை 29-ஆம் தேதி) திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் மற்றும் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

1

2

3

4

Share.