“சண்டை போட்டுட்டே இருக்கணும் பாலாஜிக்கு”… கடுப்பான ரியோ – சோமசேகர்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரியோ ராஜ், சோமசேகர் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சோமசேகர் “வீட்ல எல்லாரும் வந்துட்டு போன டைம்ல, பழைய பாலாஜியை காணோம், பழைய பாலாஜியை காணோம்னு சொல்லி சொல்லியே தான் அவன் ஒரு மாதிரி ஆயிட்டான்.

சண்டை போட்டுட்டே இருக்கணுமாம். இப்ப அவன் அந்த மாதிரி ஆடுறதுக்கான காரணமும், அவனை save பண்றதுக்காக தான். ஏன்னா அவனுக்கு பயம். actual-ஆ பார்த்தா சண்டை அவன் பண்ண விஷயங்கள் எல்லாமே தவிர்த்துட்டு பார்த்தா, கேம் fair-ஆ தான் ஆடியிருக்கான்” என்று சொல்கிறார். அதற்கு ரியோ ராஜ் “ஒரு point-க்கு மேல இந்த கேமுக்குள்ள கரெக்டா விளையாடின மாதிரி இருக்கு. பாதிக்கு அப்புறம் தான்” என்று சொல்கிறார். பின், சோமசேகர் “நம்ம எல்லார் மேலையும் தப்பு இருக்கு. அவனை மட்டுமே சொல்ல முடியாது. கொஞ்சம் அதிகமா சிலபேர்கிட்ட இருக்கு. நான் யாருன்னு சொல்ல விரும்பல” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.