‘விடுதலை’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வொர்க் அவுட் செய்யும் சூரி… வைரலாகும் வீடியோ!

‘காமெடி’ என்று சொன்னாலே சூரியின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் சூரி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் சூரியின் ஸ்பெஷல். சூரி திரையுலகில் என்ட்ரியான போது சில படங்களில் தனக்கு கிடைத்த சின்ன ரோலில் தான் நடித்து வந்தார். இப்படி சென்று கொண்டிருந்த சூரியின் கிராஃப் டக்கென உயரத்திற்கு சென்றது ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தால் தான். ‘பரோட்டா’வை பார்த்தாலே ‘வெண்ணிலா கபடிகுழு’வில் வரும் பரோட்டா சீன் தான் மைண்டுக்கு வரும்.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு சூரிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து சூரியின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சூரி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு படம் சூரிக்கு ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கப் போகிறது. ஏனெனில், இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக வலம் வரப்போகிறார்.

‘விடுதலை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூரி வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.