தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்த பின் சௌந்தர்யா ரஜினிகாந்த் போட்ட ட்வீட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா ‘3, வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) இரவு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ரஜினியின் இரண்டாவது மகளும், பிரபல இயக்குநருமான சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். ரஜினியுடன் இரண்டு மகள்கள் இருக்கும் இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே, 2010-யில் அஷ்வின் என்பவரை திருமணம் செய்த சௌந்தர்யா, அவரை 2017-யில் விவாகரத்து செய்துவிட்டு 2019-ஆம் ஆண்டு விஷாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share.