இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் அரிய புகைப்பட தொகுப்பு!

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 1967-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ரமண்ணா’ என்ற தெலுங்கு படத்தில் தான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் இடம்பெற்றிருந்தது. இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.

சாவித்திரி என்பவரை திருமணம் செய்து கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். அதிக பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தினமும் இவரின் பாடலை கேட்காத ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தன் குரலால் அனைவரின் லைக்ஸையும் குவித்தவர் எஸ்.பி.பி.

சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் (செப்டம்பர் 24-ஆம் தேதி) மாலை SPB அட்மிட் ஆகியிருக்கும் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் “எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. எங்களது சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டது. பின், நேற்று (செப்டம்பர் 25-ஆம் தேதி) மதியம் 1:04 PM-க்கு சிகிச்சை பலனின்றி SPB இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்தது. ரஜினியின் புதிய படமான ‘அண்ணாத்த’-யில் எஸ்.பி.பி ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61

62

63

64

65

66

67

68

69

70

71

72

73

74

75

76

77

78

79

80

Share.