நடிகர் அஜித் குறித்த விமர்சனங்களுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

தமிழ் சினிமாவின் சிறந்த பாடல்களை கொடுத்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.

இவரது இழப்பு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் தங்கள் இரங்கலை கூட தெரிவிக்க முடியாத நிலையில் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இணையதளம் முழுவதும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் அஜித் இணையதளம் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்ற பிரச்சனையை பலவாறு பலரும் கிளப்பி வருகிறார்கள்.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பேசியுள்ள எஸ்பிபி சரண் “நாங்கள் அனைவரும் மீளா துயரத்தில் இருக்கிறோம். அஜித் என்னுடைய நல்ல நண்பர், அவர் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவருக்கு வருத்தம் இருக்கும் என்பது எனக்கு தெரியும், ஆனால் இதை யாரும் ஒரு பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த துயரத்திலிருந்து மீள்வதற்கு அனைவருக்கும் நேரம் தேவைப்படும்” என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம் அஜித் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ்பிபி சரண்.

Share.