ரூ.10 லட்சம் பண மோசடி… பிரபல நடிகர் பிரஷாந்த் மீது புகார் கொடுத்த பெண்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த். பிரபல இயக்குநரும், நடிகருமான தியாகராஜனின் மகனான பிரஷாந்த், திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

பிரஷாந்த் அறிமுகமான முதல் படம் ‘வைகாசி பொறந்தாச்சு’. இந்த படத்துக்கு பிறகு பிரஷாந்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘அந்தகன்’. இந்த படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கியுள்ளார். இப்படம் ஹிந்தியில் மெகா ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்காம். மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் பிரஷாந்த் ரூ.10 லட்சம் பண மோசடி செய்ததாக சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் குமுதினி என்பவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் தன் மீது பொய் புகார் கொடுத்திருப்பதாக, பிரஷாந்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.

Share.