ஸ்ரீ நிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !

நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது . படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . மேலும் படத்தின் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி இருந்தது .

இந்த படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ஸ்ரீ நிதி . இந்த படங்களும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது . தற்போது இவர் நடிப்பில் கோப்ரா படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் .

 

 

 

Share.