மாநாடு படத்தின் உண்மையான வசூல் இது தான் !

நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் மாநாடு . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் யுவன் சங்கர் ராஜா. S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் . சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தை தயாரித்து இருந்தார் . கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் . கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

நீண்ட வருடமாக வெற்றிக்கு காத்துகொண்டு இருந்த சிம்புவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது . மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கும் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது . மாநாடு படம் திரையரங்கில் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படம் உலகம் முழுக்க 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் . நடிகர் சிம்புவின் படம் முதல் முறையாக 100 கோடி வசூல் செய்ததை அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர் .

Share.