அடேங்கப்பா… STR-யின் ‘மாநாடு’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் நேற்று (நவம்பர் 25-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.