சிலம்பரசனின் ‘மாநாடு’… மியூசிக்கல் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

இப்படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்கிறார்கள். தற்போது, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் “மாநாடு படத்தின் ஆடியோ ரைட்ஸை யுவன் ஷங்கர் ராஜாவின் ‘U1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது. முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதியை நாளை (ஜூன் 9-ஆம் தேதி) யுவன் ஷங்கர் ராஜா அறிவிப்பார்” என்று கூறியுள்ளார். இதனால் சிலம்பரசனின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.