“அந்த விஷயத்துக்கு அப்புறம் தான் நிதி அகர்வாலை திருமணம் செய்து கொள்வேன்”…STR எடுத்த அதிரடி முடிவு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன், மாநாடு’ என படங்கள் குவிந்தது.

மேலும், பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் ‘கலக்குவேன், என் ஆசை மைதிலியே, லூசுப் பெண்ணே, குட்டிப் பிசாசே, நலம்தானா, எவன்டி உன்ன பெத்தான், லவ் பண்ணலாமா வேணாமா’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் சிலம்பரசன். இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நடிகர் சிலம்பரசன் பிரபல நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக கோலிவிட்டில் தண்டோரா போடப்பட்டது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் சிலம்பரசன் – நிதி அகர்வால் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின், சிலம்பரசன் – நிதி அகர்வாலின் காதலுக்கு டி.ராஜேந்தரும், அவரது மனைவியும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக சொல்லப்பட்டது. தற்போது, சென்னை ECR-யில் ஒரு மிகப் பெரிய பங்களா வீடு கட்டி முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சிலம்பரசன் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.