யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிலம்பரசன் பாடியுள்ள ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடல் டீசர்

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் ஒரு புதிய மியூசிக் வீடியோவில் பாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

‘தப்பு பண்ணிட்டேன்’ என இந்த மியூசிக் வீடியோவிற்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் டாங்லி ஜம்போ இந்த மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளாராம். இதில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடித்துள்ளனர்.

Str's Thappu Panniten Song Teaser1

இதனை ‘அபி & அபி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார். இன்று (ஜூலை 7-ஆம் தேதி) இதன் டீசரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இப்பாடல் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முழு பாடல் வீடியோவை நாளை (ஜூலை 8-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.