வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறாராம். இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, இதன் ஷூட்டிங் இன்று (ஆகஸ்ட் 6-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்த படத்தின் டைட்டில் ‘வெந்து தணிந்தது காடு’ என மாற்றப்பட்டுள்ளதாம். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் அறிவித்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளது.

Share.