GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

‘வெந்து தணிந்தது காடு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறாராம். இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக மராத்தி பட நடிகை கயாடு லோகரி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இப்படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.