GVM – STR காம்போவில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறாராம்.

இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 10-ஆம் தேதி) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.