நடிகர் அஜித்துடன் இணைந்த பிரபலம் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக  வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர்  ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் .   மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம்  நடிக்க  உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை  வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும்  இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிய உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார் மேலும் வருகின்ற தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பிரபல கலை இயக்குனர் மிலன் பெர்ணான்டஸ் மற்றும் அவரது குழுவினர் நடிகர் அஜித் உடன் எடுத்த  BTS புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் AK61 படத்தில் மிலன் கலை இயக்குனராக பணிபுரிவது உறுதியாகி உள்ளது. மிலன், ஏற்கனவே அஜித் நடித்த பில்லா, ஏகன், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றியவர்.

Share.