சுதீப்பின் 3D படமான ‘விக்ராந்த் ரோணா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சுதீப். இவர் நடித்துள்ள புதிய படமான ‘விக்ராந்த் ரோணா’ நேற்று (ஜூலை 28-ஆம் தேதி) 3D தொழில்நுட்பத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

ஆக்ஷன் அட்வெஞ்சர் த்ரில்லர் படமான இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் நிரூப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இதற்கு வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.