விஜய்யை கலாய்க்கும் நெல்சன் !

சன் பிக்சர்ஸ் தயாரிப்புல விஜய் நடிப்புல நெல்சன் இயக்குத்துல உருவாகி இருக்குற படம் தான் பீஸ்ட். இந்த படத்தோட டிரெய்லர் ஏப்ரல் 2ம் தேதி வெளியானது. இதுவரைக்கும் 33மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில பொதுவா விஜய் படங்களுக்கு எப்பொழுதுமே ஆடியோ லாஞ்ச் விழா நடக்குறது வழக்கம். அந்த வகையில பீஸ்ட் படத்துக்கும் ஆடியோ லாஞ்ச் நடக்கும் அதுல தளபதி விஜய் குட்டி கதை சொல்வார்னு எதிர்பாத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆடியோ லாஞ்ச் பீஸ்ட் படத்துக்கு இல்லை சொல்லி ஏமாற்றம் அளித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்த காரணத்துனால சோகத்துல இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். பத்து வருஷத்துக்கு பிறகு நடிகர் விஜய் தனியார் தொலைக்காட்சிக்காக பேட்டி கொடுக்க போகிறார் என்று சன் தொலைக்காட்சியில் நேற்ற வெளிவந்த புறோமோ விஜய் ரசிகர்களை ஆனந்தத்தில் அழத்தியுள்ளது.

அந்த புறோமோவில் நடிகர் விஜய்யை பேட்டி எடுத்திருப்பவர் இயக்குனர் நெல்சன் . விஜய்யை கலாய்க்கும் விதமாய் குட்டி கதை சொல்ல சொல்கிறார் நெல்சன், மேலும் இன்ற
வெளியான புறோமோவில் உங்க கிட்ட தான் நாலு கார் இருக்கே நீங்க ஏன் சைக்கிளில் வாக்களிக்க போனீங்க என்று கலாய் கேள்விகளை விஜய்யிடம் கேட்கிறார் நெல்சன்.

இந்த புறோமோகளை பார்க்கும்பொழுது நிச்சயம் இந்த நிகழ்ச்சி விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10ம்தேதி இரவு 9 மணிக்கு சனி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Share.