நடிகை சுனைனாவுக்கு திருமணமா?… தீயாய் பரவும் தகவல்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சுனைனா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காதலில் விழுந்தேன்’. அதற்கு மிக முக்கிய காரணம் அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டாகி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தது.

‘காதலில் விழுந்தேன்’ படத்துக்கு பிறகு நடிகை சுனைனாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக் கருப்பட்டி, ட்ரிப்’ என படங்கள் குவிந்தது.

நடிகை சுனைனா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது சுனைனா நடிப்பில் தமிழில் ‘எரியும் கண்ணாடி’, தெலுங்கில் ‘ராஜ ராஜ சோரா’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சுனைனா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, இது தொடர்பாக சுனைனா ட்விட்டரில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.

Share.