சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ‘ஷீரோ’வில் சன்னி லியோன்… ரிலீஸானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார். இது தவிர சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், சன்னி லியோன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னதாக அறிவிக்கப்பட்டது.

‘ஷீரோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதனை இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார். சமீபத்தில், இப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர்.

இந்த மிரட்டலான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இப்போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.