சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் சன்னி லியோன்… ரிலீஸானது மிரட்டலான மோஷன் போஸ்டர்!

பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார். இது தவிர சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது, சன்னி லியோன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்துக்கு ‘ஷீரோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான இதனை இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்க உள்ளார்.

இந்த தகவலை நடிகை சன்னி லியோனே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், மிரட்டலான மோஷன் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளார். இந்த மிரட்டலான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. இதன் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

Share.