அடேங்கப்பா… ‘சூப்பர் டீலக்ஸ்’ பட நடிகை காயத்ரியின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் காயத்ரி ஷங்கர். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம், பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் மகன் ஜானியுடன் தான். அது தான் ’18 வயசு’. அதன் பிறகு காயத்ரி நடித்த ஒரு படமும், அதில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சியும் தான் காயத்ரியை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது.

அது தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஒரு காட்சியில் காயத்ரியின் முகத்தை பார்த்து ‘ப்பா’ என்று சொல்வார். அக்காட்சிக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்தது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு பிறகு நடிகை காயத்ரி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பொன்மாலை பொழுது, மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், K 13’ என படங்கள் குவிந்தது. இப்போது காயத்ரி நடிப்பில் ‘மாமனிதன், டைட்டானிக், காயல், பஹீரா’ என நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை காயத்ரி ஷங்கரின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் என தகவல் கிடைத்துள்ளது.

Share.