சூப்பர் ஹிட்டான கன்னட படம்… ரீமேக் ரைட்ஸை கைப்பற்றிய சுந்தர்.சி!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது, தமிழில் ரீமேக்காகப்போகும் ஒரு புதிய படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. கன்னட திரையுலகில் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான படம் ‘மாயாபஜார் 2016’. இந்த படத்தை இயக்குநர் ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கியிருந்தார். இதில் ராஜ்.பி.ஷெட்டி, வசிஸ்தா சிம்ஹா, அச்யுத் குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல இயக்குநர் சுந்தர்.சி தனது தயாரிப்பு நிறுவனமான ‘அவ்னி மூவீஸ்’ சார்பில் கைப்பற்றியுள்ளார். இதில் பிரசன்னா, ஷாம், அஷ்வின், யோகி பாபு ஆகியோர் நடிக்கவுதமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, ள்ளனர். இந்த படத்தை இயக்குநர் பத்ரி இயக்க உள்ளாராம்.

Share.