777 சார்லி ” படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

பொதுவாக ரஜினிகாந்த் தமிழில் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . சமீபத்தில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் படத்தை பார்த்துவிட்டு விக்ரம் பிரபுவை பாராட்டினார். மேலும் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பாராட்டி இருந்தார் . விக்ரம் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமலுக்கு போன் மூலம் தனது பாராட்டை தெரிவித்து இருந்தார் .

இந்நிலையில் கிரண்ராஜ் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி ஆகியோருடன் நாய் சார்லி நடித்த கன்னடப் படமான ‘777 சார்லி’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. நாய் சார்லியின் அற்புதமான நடிப்பால் படத்திற்கு பெரிய வரவேற்பும் கிடைத்தது. இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் நாயகன் ரக்ஷித்திற்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை ரக்ஷித் பகிர்ந்துள்ளார். அதில் இன்றைய நாள் என்ன ஒரு அற்புதமான ஆரம்பம். ரஜினிகாந்த் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் நேற்று இரவு ‘777 சார்லி’ படத்தைப் பார்த்து பிரமித்துள்ளார். படத்தின் உருவாக்கத் தரம், படத்தின் ஆழ்ந்த டிசைன் மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் ஆன்மிகத்தில் முடிவடைவது, ஆகியவற்றைக் குறித்து உயர்வாகப் பேசினார். சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது அற்புதமானது, நன்றி சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது .

Share.