ராகெட்ரி படத்தை பார்த்த ரஜினிகாந்த் !

தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

பொதுவாக ரஜினிகாந்த் தமிழில் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . சமீபத்தில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் படத்தை பார்த்துவிட்டு விக்ரம் பிரபுவை பாராட்டினார். மேலும் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பாராட்டி இருந்தார் . விக்ரம் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமலுக்கு போன் மூலம் தனது பாராட்டை தெரிவித்து இருந்தார் . சமீபத்தில் வெளியான ‘777 சார்லி’ படத்தையும் பாராட்டி இருந்தார் .

இந்நிலையில் நடிகர் மாதவன் இயக்கி நடித்து இருக்கும் படம் ராக்கெட்டரி . படம் வெளியான நாள் முதல் இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு நடிகர் மாதவனின் நடிப்பு மற்றும் இயக்கத்தை வெகுவாக பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியீட்டு உள்ளார் . இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .

Share.