ரஜினி – சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் வெளியான ‘அண்ணாமலை’… இப்படத்தை இயக்குவதற்காக முதலில் ஒப்பந்தமான இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்.

ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘அண்ணாமலை’. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்பாபு, ரேகா, ராதாரவி, ஜனகராஜ், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குவதற்காக முதலில் ஒப்பந்தமானது பிரபல இயக்குநர் வஸந்த் தானாம். பின், சில காரணங்களால் வஸந்த் இப்படத்திலிருந்து விலகி விட்டாராம்.

Share.