சூர்யா 43 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ?

கடந்த 2020ம் ஆண்டு சூர்யா தயாரித்து நடித்த படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தை
சுதா கொங்கரா இயக்கி இருந்தாங்க .அமேசான் ஓ.டி.டியில் இந்த படம் வெளியானது . அந்த
வருடத்தோட மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றுச்சி . ஜி .வி. பிரகாஷ் குமார் இந்த
படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

இந்த படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது . ஆஸ்கார்
நாமினேஷன் வரை சென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தது . பல வருடமாக சரியான
வெற்றி படம் கொடுக்காமல் போராடிக்கொண்டு இருந்த நடிகர் சூர்யாவை வெற்றி பாதைக்கு
அழைத்து சென்ற படம் .

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைந்து சூர்யா
ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதினர் . அதை உறுதி படைத்தும் வகையில்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் விரைவில் அந்த படம் தொடங்கும் என்று கூறி இருந்தார் .

இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்
சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் .இந்த படம் மிக
பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும் , உண்மை கதையை தழுவி எடுக்க உள்ளதாகவும்
கூறி உள்ளார் . மேலும் இந்த படம் சூரரைப் போற்று படத்தை காட்டிலும் கடினமாக இருக்கும்
என்று கூறி உள்ளார் . இதனால் சூரிய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் .

Share.