நடிகை ராதிகாவின் 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சூர்யா – தனுஷ்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராதிகா. பிரபல நடிகர் சரத்குமாரின் மனைவியான ராதிகா தமிழில் அறிமுகமான முதல் படம் ‘கிழக்கே போகும் ரயில்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாரதிராஜா இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த படத்துக்கு பிறகு நடிகை ராதிகாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. ராதிகா தமிழ் மொழி படங்களில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘யானை, குருதி ஆட்டம்’ ஆகிய படங்களில் ராதிகா மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்போது ராதிகா நடிப்பில் ‘கொலை, வெந்து தணிந்தது காடு, லவ் டுடே, சந்திரமுகி 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) நடிகை ராதிகாவின் 60-வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர்கள் சூர்யா – தனுஷ் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்ததுடன், ஸ்டில்ஸும் வெளியாகியுள்ளது.

 

Share.