கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன், காளிதாஸ் ஜெயராம், ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட First Glance மற்றும் நேற்று வெளியிடப்பட்ட ‘பத்தல பத்தல’ பாடல் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தின் அனைத்து பாடல்கள் & ட்ரெய்லரை வருகிற மே 15-ஆம் தேதியும், படத்தை ஜூன் 3-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று சென்னையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஷூட் செய்யப்பட்டதாம். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.