20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாவுடன் கைகோர்க்கும் சூர்யா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

‘ஜெய் பீம்’ படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகவுள்ளது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்க உள்ளாராம்.

ஏற்கனவே, சூர்யா – பாலா காம்போவில் ‘நந்தா, பிதாமகன்’ என 2 சூப்பர் ஹிட் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் பாலாவுடன் இணைவது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.