சூர்யா – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடிக்கிறார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில், இதன் போஸ்டர்ஸ் மற்றும் டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த போஸ்டர்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம்.

Share.