அப்போவே சூர்யாவுடன் நடித்த திஷா !.. இந்த வீடியோவை பார்த்து இருக்கீங்களா ?

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். மேலும் நயன்தாரா , கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பு என ஒரு நட்சத்திரக் கூட்டம் நடித்து இருந்தது. கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.அந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது என்றும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் நடக்க இருக்கிறது என்றும் இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது .

இந்நிலையில் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா இணையும் படத்தை தற்போது ஞானவேல் ராஜா தயாரிக்கவில்லை என்று அவரே தெரிவித்துள்ளார் . படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளதால் இந்த படத்தை தற்பொழுது யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது . யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் சாகோ , ராதே ஷ்யாம் ஆகிய படங்களை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது . இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா மற்றும் திஷா பட்டாணி இணைந்து நடித்த பழைய விளம்பர படம் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . மேலும் அந்த விளம்பரத்தில் சூர்யா மற்றும் திஷா பட்டாணி காதலர்களாக நடித்து இருந்தனர் . இருவருக்கும் உண்டான கெமிஸ்டரியை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர் .தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Share.